சனி, 5 செப்டம்பர், 2015

"இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம்கள் தண்டிக்கப்பட வேண்டும்" - தொகாடியா


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இந்த நாட்டை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் எனச் சொன்ன விசுவ இந்து பரிஷத் தலைவர் ப்ரவீண் தொகாடியா அடுத்துக் கக்கியுள்ள விஷம் "இரண்டு குழந்தைகளுக்கு மேல் முஸ்லிம்கள் பிள்ளை பெற்றுக் கொண்டால் அதை்த் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும்" என்பது.
மூன்றாவது குழந்தையை முஸ்லிம்கள் பெறும்போதுதான் அது குற்றம்.
"இப்படி முஸ்லிம் வீடுகளில் பிறக்கும் ஒவ்வொரு மூன்றாம் குழந்தைக்கும் ரேஷன் கார்டு முதலியவற்ிறில் இடம் கொடுத்து அரசு மாநியங்கிளை எல்லாம் அளிக்காமல், இப்படி மூன்றாவதாகப் பிறக்கும் முஸ்லிம் குழந்தைகளுக்கு ரேஷன், இட ஒதுக்கீடு, உதவித் தொகை முதலான அனைத்து அரசு உதவிகளையும் நிறுத்த வேண்டும்" என்றுள்ளார் தொகாடியா.
ஆர்.எஸ்.எஸ் சின் மூன்று நாள் மாநாட்டை ஒட்டி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது ஆர்.எாஸ்.எஸ் து,தலைவர் தாத்தரேய ஹோசபலே, "தொகாடியாவின் கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்சின் வழிகாட்டலின்படி தான் நடப்பதாக அந்த மாநாட்டில் மோடி உறுதி கூறுகிறார்.
ஒரே கும்பல் வெவ்வேறு பெயர்களில் என்னென்ன லூட்டி அடிகின்றன. எத்தனை நாடகங்கள் போடுகின்றன.
தேர்தல் நேரம் பார்த்து வழக்கமாகக் கொடுக்கப்படும் விரிவான விளக்கங்களை எல்லாம் நிறுத்திவிட்டு ஏதோ முஸ்லிம்கள் வளர்ச்சி வீதம் அபரிமிதமாக அதிகிரித்து வருவது போலச் செய்தியை வெளியிட்டு கள்ள மௌனம் காக்கிறது நரேந்திர மோடி அரசு.
தொகாடியா போன்ற பிளவு அரசியல்வாதிகள் ஒரு புறம் இப்படிக் கொடூரமாக முஸ்லிம்கள் வயிற்ரில் அச்சத்தை வார்க்கின்றனர். மோடி அரசு தனக்கு இது தொடர்பில்லாதது போல வேறு ஏதோ பெரிய விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறது. தொகாடியா என்பது யார்? மோடியின் இன்னொரு முகம். மோடி என்புது யார் தொகாடியாவின் இன்னொரு முகம்.
பாவம் முஸ்லிம்கள். அவர்கள் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். நாளொரு மேனி பொழுதொரு வண்னம் அவர்கள் மீது பல்வேறு வழிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பதில் சொல்லி மாளவில்லை. அவர்கள் கட்சிகளும் கூட சோர்ந்து விட்டன.
துணைக் குடியரசுத் தலைவர், எல்லோராலும் மதிக்கப்படக் கூடிய கண்ணியம் மிக்க ஹமித் அன்சாரியும் கூட எதுவும் பேச இயலவில்லை. இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நிலையை அவர் சொன்னார், மனச்சாட்சி உள்ள எந்த மனிதப் பிறவியும் சொல்வதைத்தான் அவர் சொன்னார். குடியரசுத் துணைத் தலைவர் என்றுங் கூடப் பாராமலெத்தனைத் தாக்குதல்கள். அந்தத் தாக்குதலுக்கு உரிய எதிர்வினையையும் கூட முஸ்லிம் இயக்கங்கள் காட்ட இயலவில்லை.
மிகவும் கவலை அளிக்கிறது.
இது நல்ல அற்குறியல்ல.

thxk: Marx Anthonisamy