எதிர்வரும் காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல் பூமி மீது மோதுவதை தடுக்கும் விதமாக அதன் பயணப்பாதைய மாற்றும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக சிறிய ஒரு ஜோடி இரட்டை விண்கற்கள் மீது விண்கலமொன்றை மோதவிட்டு அவற்றின் பயணப் பாதையை மாற்ற முடியுமா என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அயிடா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரு விண்கலங்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. அவற்றில் ஒரு விண்கலம் வின்கல்லுடன் மோதும். அவ்வாறு விண்கலம் மோதியவுடன் அந்த விண்கல்லில் ஏற்படும் மாற்றத்தை மற்றைய விண்கலம் படம் பிடிக்கவுள்ளது