திங்கள், 5 அக்டோபர், 2015

குறைந்த விலையில் இணைய சேவை: உரிமம் பெற்றது தமிழக அரசு கேபிள் நிறுவனம்



இணைய சேவை வழங்குவதற்கான உரிமத்தை மாநில அரசின், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் குமரகுருபரன் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மாநிலம் முழுவதும் அகண்ட அலைவரிசை சேவை மற்றும் இணையதள சேவையை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சேவையை, உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் வழங்க உள்ளதாகக் கூறியுள்ள குமரகுருபரன், விருப்பம் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம், குறைந்த விலையில், மக்களுக்கு இணைய வசதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் கடந்த மாதம் அறிவித்ததற்கு இணங்க, அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.

Related Posts: