புதன், 14 அக்டோபர், 2015

CIA யின் தயாரிப்பு தான் ISIS

ISIS இன் பின்புலம் இப்போது மெல்ல வெளிவருகிறது. புட்டின் இறங்கி அடிக்கமாட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் விளாசல்.
CIA யின் தயாரிப்பு தான் ISIS என்கிற உண்மை இப்போது மெல்ல கசிகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளைத் தாக்காமல் மாடரேட்டுக்களைத் தாக்குகின்றன ரசியப் படைகள் என்று அமேரிக்கா முனகுகிறது.
அடேய் அடேய் நாடகக்காரனுங்களா, அமெரிக்காவின் ஆயுதங்கள் ISIS இடமிருந்து கைப்பற்றப்பட்ட போது அது பாதுகாப்புக்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டதுன்னு கதை விட்டீங்க. இப்போ சிரியா அரசின் ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் ரசியா புகுந்து அடிக்கிறது.
இல்லை என்று அமேரிக்கா சொல்கிறது. நல்ல வேளை அகதிகள் பிரச்சனை வந்ததால் ஐரோப்பிய நாடுகளும் வாயை மூடி வேடிக்கை பார்க்கின்றன. இல்லையென்றால் ரசியாவை குதறி இருப்பார்கள்.
இதே பலத்துடன் இராக்கின் பிரச்சனையின் போது ரசியா இருந்திருந்தால் கதையே வேற. இவனுங்க கண்டுபிடிக்கிற மதத் தீவிரவாதம் இவனுங்களோடதுன்னு அப்பவே அமெரிக்காவை சோலியை முடித்திருக்கலாம். வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன் என்று கதை விட்டு எவ்வளவு அழிப்பை செய்தார்கள்? முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லையென்று உலகத்தையே நம்ப வைத்துவிட்டார்களே, பாவிகள்.

Related Posts: