வெள்ளி, 13 நவம்பர், 2015

மியன்மர் தேர்தல் கேலிக்கூத்து



சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தின் பிடியில் இருந்த மியன்மரில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சி கட்சி நான்கில் முன்று பங்கு பெரும்பான்மை பெற்றார்,
இருப்பினும் அவரைப் பதவி ஏற்க விடாமல் சிறையில் அடைத்தது இராணுவ அரசு. புதிய நாடாளுமன்றம் ஒருமுறையேனும் கூடவே இல்லை.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேர்தலை நடத்தி இருக்கிறது இராணுவம்,
இப்போதும் சூச்சி நான்கில் முன்று பங்கு பெரும்பான்மை பெறுகிறார்,
ஆனால் அவர் ‘குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்க முடியாது என இராணுவ ஆட்சி சட்டம் போட்டு இருக்கின்றது,
காரணம். அவரது கணவர் இங்கிலாந்து நாட்டுக்காரர்.
சூச்சி இலண்டனில் படித்தபோது மலர்ந்த காதல் அது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அவர்கள் மிய்ன்மாரிகள் அல்ல இங்கிலாந்துக்காரர்களே என்றும் இராணுவ ஆட்சி கூறி விட்டது,
அயல்நாட்டவரைத் திருமணம் செய்த சூச்சியும் உயர்பதவி வகிக்க முடியாது,
எனவே அவரது கட்சியில் வேறு யாரேனும் ஒருவர் அதிபராக ஆகக் கூடும்,
சூச்சி நாடாளுமன்ற சபாநாயகராக்த் தேர்ந்து எடுக்கப்படுவார் எனத் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன,
இதில் இன்னொரு வேடிக்கை,
நாடாளுமன்றத்தில் முன்றில் ஒரு பங்கு இடங்களை இராணு வம் எடுத்துக் கொண்டு விட்டது. எஞ்சிய இடங்களுக்குத்தான் தேர்தல் நடைபெற்றது,
உலகிலேயே சுமார் 200 உறுப்பினர்கள் இராணுவ உடையுட்ன் நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்து இருக்கின்ற கேலிக்கூத்தை
மியன்மரில் பார்க்கலாம்
.
இதற்குமுந்தைய நாடாளுமன்றக் கூட்டப் படங்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன, பாருங்கள்,
புதிய அதிபரைத் தேர்ந்து எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள படைத்தலைவர்களும் வாக்கு அளிக்க வேண்டுமாம்,
அதைவிடக் கேலிக்கூத்து புதிய அதிபர் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதிதான் பதவி ஏற்க முடியுமாம்.