புதன், 4 நவம்பர், 2015

மரணமடைந்தவர்களின் உடல்களை கழுகுகளுக்கு உணவாக்கும் திபெத்தியர்கள்: அதிர்ச்சி செய்தி

திபெத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை கழுகுகளுக்கு உணவாக்கும் விநோத சடங்கை அங்குள்ள பவுத்தர்கள் மற்றும் மங்கோலியர்கள் செய்து வருகின்றனர்.
திபெத்தியர்கள் கழுகுகளை தேவதூதர்கள் போன்றவைகள் என கருதுவதால் அவைகளுக்கு இறந்தவர்களின் உடல்களை படைத்து விநோத சடங்கை செய்து வருகின்றனர்.
இறந்தவர்களின் உடல்களை பல பாகங்களாக துண்டித்து அதனை கழுகுகளுக்கு உணவாக்குவதால், அவர்களின் ஆன்மாவும் சொர்க்கத்தில் எடுத்துச் செல்லப்படும் என திபெத்தியர்கள் நம்புகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள Larung valley பகுதியில்தான் திபெத்தியர்களால் Sky burial என அழைக்கப்படும் இந்த விநோத சடங்குகள் நடைபெற்று வருகின்றன.
பெருவாரியான திபெத்தியர்களும் பெரும்பாலான மங்கோலியர்களும் வஜ்ராயன புத்த மதத்தை பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.