கேபினட் ஒப்புதல் வாங்காமலேயே 15 முக்கியத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார் மோடி.
இதனை இந்திய முதலாளிகள் பாராட்டுகின்றனர்.
கேபினட் ஒப்புதல் இல்லை.
பாராளுமன்ற ஒப்புதல் இல்லை.
இது என்ன ஜனநாயகம்?
பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பே இத்தகைய பெரிய முடிவுகள் எடுக்கலாமா?
இதற்காக கேபினட் கூடி விவாதிக்க வேண்டாமா?
மோடி சர்வாதிகாரி என்பதை மீண்டும் ஒரு முறை நியமித்திருக்கிறார்.
பீகார் தேர்தலில் மோடியின் பொருளாதாரக் கொள்கைக்கு மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
பிறகு எப்படி மோடி கண்ணை மூடிக்கொண்டு இத்தகைய முடிவுகளை எடுக்கலாம்?
எதிர்கட்சிகளின் கருத்து என்ன?
பாராளுமன்றத்தில் இரண்டு அவைகளில் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
இது என்ன இவர் கொல்லையில் விளையும் புடலங்காயா? அள்ளிக் கொடுப்பதற்கு?
மிஸ்டர் மோடி!
இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வெட்கங்கெட்ட ஊடகங்கள் மோடியின் பின்னால் இங்கிலாந்துக்கு ஓடி ஜால்ரா போடுகின்றனர்.
மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வரும் ஒரு தலைவர் மோடி.
தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள மறுக்கும் பிரதமர் மோடி.
இதைப் பற்றிப் பேசாமால் மோடி இங்கிலாந்துக்குப் போனார், இமயமலையைப் புரட்டினார் என்று புருடா விடுகின்றனர்.
பீகார் மக்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக மட்டுமா வாக்களித்தனர்?
மோடிக்கு எதிராகவும் வாக்களித்தனர்?
தோல்வி அடைந்தவர் அடக்கி வாசிக்க வேண்டாமா?
கவனமாக இருக்க வேண்டாமா?
மக்கள் என்ன முட்டாளா?
thanks (Amudhan Ramalingam Pushpam)