சென்னை & கடலூர் மீட்புப்பணி மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அன்பிற்கினிய சகோதரர்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது என்னவெனில் -
நீங்கள் எந்த இயக்கம் அல்லது கட்சியினை சார்ந்தவர்கள் என்பது நன்கு தெரியும் வண்ணம் உங்களை வெளிப்படையாக அறிவித்து களத்தில் நில்லுங்கள்.
எந்த இயக்கம் அல்லது கட்சியினையும் சாராதவராக இருந்தால் நீங்கள் முஸ்லிம் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தி செயல்படுங்கள்.
அது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மையை தூண்டும் விளம்பரமாகவும் -
நமது சமுதாயத்தின் நல்லறங்களை இருட்டடிப்பு செய்யும் இந்திய மீடியாக்களின் உண்மை முகத்தை தேசம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அமைந்திடும் என்பதை நினைவில் கொள்ளவும்.