செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இஸ்லாமிய அமைப்புகள் அனைத்துமே முழுஅர்ப்பணிப்புடன் பேரிடர் மீட்புபணியில் ஈடுபட்டு சென்னையை மீட்டார்கள்



சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது, முகமது யூனுஸ் என்கிற தோழர் புரிந்த போற்றத்தக்க பணிகளுக்காக தமிழக அரசு அவருக்கு அண்ணா விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது. வேறு சில அமைப்புகளும் அவருக்கு விருது கொடுத்து பாராட்டியிருக்கிறார்கள். இவருடைய முயற்சியால் காப்பாற்றப்பட்ட ஒரு நிறைமாத கர்பிணிப் பெண் (இந்து மதத்தைச் சேர்ந்தவர்), தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் என்கிற செய்தி நம்மையெல்லாம் சிலிர்க்க செய்தது. எல்லா வகையிலும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்தான் திரு.யூனுஸ் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அதைவிட மிக முக்கியமாக நாம் அங்கீகரிக்கவேண்டிய செயல் என்பது, இஸ்லாமிய அமைப்புகள்/இயக்கங்கள் அனைத்தும் அமைப்புரீதியாக களத்தில் இறங்கி ஆயிரக்கணக்கான தங்களுடைய உறுப்பினர்களை முழு ஒழுங்குடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படவைத்ததுதான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ மற்றும் இன்னும் பல நமக்கு பெயர் தெரியாத முஸ்லிம் அமைப்புகள் போர்கால நடவடிக்கைபோல பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொண்டிராவிட்டால் நாம் சந்தித்திருக்கக்கூடிய பேரிழப்பு இன்னும் பல மடங்காக இருந்திருக்கும்.
தனி நபர்களின் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு எல்லாம் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியதுதான் என்ற போதிலும், இஸ்லாமிய அமைப்புகள் அனைத்துமே முழுஅர்ப்பணிப்புடன் இந்த பேரிடர் மீட்புபணியில் ஈடுபட்டு சென்னையை மீட்டார்கள் என்கிற உண்மை, வரலாற்று பக்கங்களில் மறக்கடிக்கப்பட்டுவிடகூடாது.
Thnks:  
பிரபாகரன் அழகர்சாமி