குற்ற விசாரணை முறை சட்டம் 1973-ன் சட்டப்பிரிவு 310,
"(1) ஒரு பரிசீலணை, விசாரணை அல்லது நடவடிக்கையி எந்தக் கட்டத்திலும், தரப்பினர்களுக்கு முறைப்படி அறிவித்த பிறகு, குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தை, ஒரு நீதிபதி அல்லது குற்றவியல் நடுவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். அந்த விசாரணையில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியத்தை நல்ல முறையில் சீர் தூக்கிப் பார்ப்பதற்கு அத்தகைய ஆய்வு தேவை என்று கருதினால் அந்த இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். அவர் அந்த ஆய்வில் கண்டறிந்தவற்றைக் காலதாமதம் செய்யாமல் தொகுத்துக் குறிப்பாக எழுதி வைக்க வேண்டும்.
(2) அப்படி எழுதி வைக்கப்பட்ட குறிப்பு, அந்த வழக்கின் கோப்பில் இடம் பெறும். அதனுடைய நகலை, குற்றத் தரப்பில் அல்லது எதிரியின் தரப்பில் அல்லது வேறு எவராவது வேண்டுமென்று கருதினால், இலவசமாக அவருக்குத் தர வேண்டும்"