வியாழன், 16 ஜூன், 2016

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சுயமாக சொன்னதெல்லாம் மார்க்கமாகுமா?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நோன்பு பரிகாரம் தொடர்பாக திருக்குர்ஆன் வசனத்திற்கு முரணாக தனது சொந்தக் கருத்தை கூறியுள்ளார்கள். மாற்றப்பட்டச் சட்டத்தை மாற்றப்படாத சட்டம் என்று கூறியுள்ளார்கள். இதை நியாயப்படுத்த வந்த ஆய்வுப்புளி அவர்கள் சவூதி சல்லிக்கு ஆசைப்பட்டு ஒரு புதிய உளறலை விளக்கம் என்ற பெயரில் சொல்லி உளறி மாட்டியுள்ளார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொந்தமாக சொன்னதெல்லாம் மார்க்கம் ஆகும் என்று உளறியிருக்கிறார்.
இதுபோல இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சுயமாக சொன்ன அனைத்து செய்திகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதுதான் என்று அறிவிக்கத்தயாரா? என ஆய்வுப்புளி அப்பாஸ் அலிக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.
அப்படியானால் திருக்குர்ஆனில் உள்ள ஒரு வசனத்தையே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மாற்றி ஓதியுள்ளார்கள். (பார்க்க புகாரி 2098).
மவாசிமில் ஹஜ் என்ற வாசகம் திருக்குர் ஆனில் இல்லை. ஆனால் அப்படி ஒரு வாசகத்தை குர் ஆன் என்றூ சொல்லி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் தற்போதுள்ள குர்ஆனை அப்பாஸ் அலி மாற்றியமைத்து புதிய திருக்குர்ஆன் வெளியிடுவாரா? பகிரங்க அறைகூவல்...
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கண்ணியப்படுத்துவதாகச் சொல்லி அல்லாஹ்வுடைய வேதத்தை இழிவுபடுத்தும் அப்பாஸ் அலி சவூதி சல்லிக்காக இதுபோல கொள்கை கெட்டுப்போவது நல்லதல்ல என எச்சரிக்கின்றோம்.
குறிப்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சுய விளக்கத்தை அல்லாஹ்வின் தூஹர் சொல்லிய செய்தியாக நபிகளார் மீது இட்டுக்கட்டிய அப்பாஸ் அலி அவர்கள் அந்நிய பெண்களிடத்தில் கண்ட களிய ஆடவனும் பால்குடிக்கலாம் என்று நபிகளார் சொன்னதாக ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்லும் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்களின் சுய கருத்து என்று சொல்லி அந்தர் பல்டி அடிக்கின்றார்.

Related Posts: