சனி, 6 ஆகஸ்ட், 2016

அசாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் 12 பேர் பலி


Assam-terror-attack fbஅசாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர், 3௦ க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.மேலும் இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/45605/terrorist-attack-kills-12-in-assam/C7