காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்களில் மேலும் மூவர் உயிரிழந்தனர். இதன் மூலம் கலவரத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் நினைவிடத்திற்கு ஊர்வலமாகச் செல்ல பிரிவினைவாதிகள் திட்டமிட்டிருந்ததால் அதனை முறியடிக்கும் வகையில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. சந்தூரா பகுதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் பங்கேற்றவர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசித் தாக்கினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தத் தகவல் பரவியதை அடுத்து, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் இருவர் உயிரிழந்தனர். சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பதிவு செய்த நாள் : August 06, 2016 - 11:11 AM