தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைக்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3), வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதன்படி, குரூப்-4 தேர்வுகான குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியே.. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் கூடுதல் தொழில் நுட்ப தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 18 முதல் 32 வயது வரை மற்றும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 18 முதல் 35 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இத்தேர்வுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வின் பாடத்திட்டம், விண்ணப்ப கட்டணம், கட்டணச் சலுகை, தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலே அரசு வேலை உறுதி! ஏனெனில் இத்தேர்விற்கு நேர்முக தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்த நாள் : August 10, 2016 - 12:53 PM
Source: New Gen Media