வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை இணையதளம் மூலம் காணும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்காக ரூ.50 லட்சம் செலவில் 20 அக ஊதாகதிர் (இன்ஃபிராரெட்) கேமிராக்களை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் விலங்குகளின் நடமாட்டத்தை பூங்கா அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
August 11, 2016 - 06:43 PM