வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

பழைய நினைவு ஒன்றினை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஜக்கி வாசுதேவ் , இரண்டு சந்நியாசினி பெண்கள்- விவகாரம்.
பழைய நினைவு ஒன்றினை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
1977 அக்டோபர் 1978 ஏப்ரல் வரை ஆண்டிபட்டியில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர். பல வேண்டாத நிகழ்வுகளால் துறவு பூண்டுவிடலாம் என முடிவு செய்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
பதில் ஒன்றும் இல்லை.மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதினேன்.
சில நாட்களில் மடத்து சாமியார் ஒருவர் என்னை தேடி வந்தார். எனக்கு நல்ல புத்தி சொல்லி, அதாவது என்
உத்தியோகத்தில் முழு கவனம் செலுத்தி மக்கள் சேவை செய்யும் படி அறிவுறுத்தி என் துறவு எண்ணத்தை கைவிட வைத்தார்.
ஒரு ஆள் சிக்கிகொண்டான் அவனை பிடித்து சாமியார் ஆக்குவோம் என்று அந்த சாமியார் நினைக்கவில்லை.
இளம்பெண்கள் துறவினை நாடி வந்தால் அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லி சமுதாய சேவை செய்ய வைத்து இருக்கலாம் ஜக்கி.
thanks to : Jebamani Mohanraj

Related Posts: