சைனஸ் தலைவலியை சமாளிக்க ஸ்மார்ட் வழிகள்.!!
சைனஸ் தலைவலி நம்மையே தலைகீழாக மாற்றி விடும். சைனஸ் வருவதற்கான முக்கிய காரணம் முகத்தில் உள்ள காற்று அறைகள் நோய் தொற்றினால் பாதிப்படைவதே இதனால் முகம் வீங்கி பெரிதும் அவதி படுவர். இது ஒரு நோய் அல்ல ‘அலர்ஜி’
கடற்கரைக்கு அதிகளவில் செல்வது, நீர் காய், பழங்களை உட்கொள்ளுதல், மதிய நேரத்தில் தூங்குதல், பஸ் மற்றும் ரயிலில் ஜன்னல் ஓர இருக்கையை தவிர்த்தல், ஐஸ் வாட்டர், குளிர்பானங்கள், என்னை பதார்த்தங்கள் சாப்பிடுவதை குறைத்து கொண்டாலே சைனஸ் அலர்ஜியிலிருந்து விடுபட முடியும்.
தினந்தோறும் தலை குளிப்பதை தவிர்த்தல் முக்கியமாக வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள், தயிர், பானிபூரி, மசாலா வகைகள், புளிப்பான பதார்த்தங்கள் உண்பதை கட்டுபடுத்தினாலே சைனஸ் தலை வலி ஓடிபோய் விடும்.
சில டிப்ஸ்..
* கஸ்தூரி மஞ்சள் அல்லது விரலி மஞ்சளை நெருப்பில் காய்த்து அந்த புகையை முகரலாம், வீடு சுத்தம் செய்யும் பொது மாஸ்க் அணிந்து வேலை செய்யலாம்.
* சுக்கை வெந்நீரில் இழைத்து பத்து போடலாம், தலைக்கு குளித்த பின் கூந்தலை நன்றாக துவட்டி விடவேண்டும்.
* அரக்கு தைலம், குறட்டை தைலம், சுக்கு தைலம் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் சைனஸ் தலைவலியிலிருந்து விடுபடலாம்.
* தலைக்கு குளித்து தலைவலி ஏற்பட்டால் கல்லு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அதனுடன் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடித்தால் தலைவலி பரந்தோடிவிடும். இனி சைனஸா நோ டென்ஷன்!!
பதிவு செய்த நாள் : August 04, 2016 - 07:44 PM