செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

பாண்டிச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயனசாமி அவர்கள் மமக பொதுச்செயலாளருக்கு உறுதி

பாண்டிச்சேரி முதல்வர் மாண்புமிகு நாராயனசாமி அவர்கள் மமக பொதுச்செயலாளருக்கு உறுதி
பாண்டிச்சேரியில் உருளையான் பேட்டை அருகில் உள்ள பள்ளிவாசலை தாக்கியும் அங்கு இமாம் நூருல் அமீன் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி இன்று தமுமுக மமக புதுவை மாநில நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமையில் பாண்டிச்சேரி முதல்வர் திரு நாராயனசாமி அவர்களை சந்தித்தார்கள்.
தாக்குதலில இடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் புதுவையின் அமைதிக்கும் இறையான்மைக்கும் பங்கம் விளைவிப்போர் மீது கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொதுச்செயலாளரிடம் உறுதியளித்தார்
உடன் மமக மாநில துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபீதின் உடனிருந்தார்
Source; TMMK Media

Related Posts: