பூமி மாசுபடுவதற்கு ஒரு மிகப்பெரும் காரணமாக இருப்பது மின் உற்பத்தி. இணைய பொழுதும் குடிக்கத் தண்ணியும் சாப்பிடச் சாப்பாடு வேணும்னா மொதல்ல அதுக்கு கரண்டு வேணும். ஒருபக்கம் சுற்றுச்சூழல் நாம் அழித்து கொண்டே வரும் நிலையில் இப்போது சற்று விழித்துக் கொண்டு அதை எப்படி தொழில்நுட்பம் மற்றும் பிற முயற்சிகள் மூலம் சரி செய்யலாம் என்று செயல்பட துவங்கியிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோருக்கு சக்தி அல்லது மின்சாரத்தைச் சேமிக்க மிகவும் விலையுயர்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வழியில்லை என்றாலும் ப்ராப்கைடு இணையதளம் இந்த பூவுலகைப் பாதுகாக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு அளிக்கிறது.
நிறுத்துங்கள்…:
முடிந்த வரை வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள ஏசி, கணினி மற்றும் பிரிண்டர்கள் போன்ற மின்சாரத்தை அதிகம் உறிஞ்சும் பொருட்களை உபயோகத்தைச் சரியான முறையில் அல்லது குறைந்த அளவில் பயன்படுத்துங்கள்.
இயற்கையான வெளிச்சம்:
அறைகளில் இயற்கையான வெளிச்சம் படுமாறு அமைத்திடுங்கள். உபயோகமில்லாத அறைகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வையுங்கள். ஜன்னல்களை அடிக்கடி திறந்து புதிய காற்று வந்து செல்ல அனுமதியுங்கள்.
பாதுகாப்பை நீங்களே செய்யுங்கள்:
இதன் மூலம் நீங்கள் சக்தியை 30 சதவிகிதம் வரை சேமிக்க முடியும். சுவர்களில் பாதுகாப்பு பூச்சைப் பூசுவதால் சூரிய சக்தியை நன்கு பயன்படுத்த முடியும். குளிர் காற்றைத் தடுக்கும் பிளாஸ்டிக் உறைகள் கதவிடுக்குகளை மூடும் தடுப்பான்கள் (ஸ்டாப்பர்ஸ்) போன்ற நாமாகவே செய்யக்கூடிய சில பொருட்களை பயன்படுத்துங்கள். ஓவர்ஹங்ஸ் மற்றும் ஆனிங்ஸ் போன்ற ஜன்னல் தடுப்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளி புகுவதைத் தடுத்தால் வீடு சூடாகாமல் மின்சாரச் செலவைக் குறைக்கும்
கதிர்களிலிருந்து பாதுகாக்க:
நீடித்துழைக்கும் ஜன்னல்கள், திரைச் சீலைகள் மற்றும் ஒளிதடுப்பு பிலிம்கள் ஆகியவை சூரிய ஒளி புகுவதைத் தடுத்து வீட்டுப் பொருட்களை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும்
மாற்றத்திற்கான நேரம் இது:
மின்சாரத்தைச் சேமிக்கும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் உங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க பெருமளவில் உதவும். உங்களுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் இது போன்ற சேமிப்பு முறைகளை ஒவ்வொன்றாகத் தொடங்குங்கள். முதலில் எல்ஈடி பல்புகளை பயன்படுத்துங்கள். பின்னர் பெரிய மின்சார உபகரணங்களில் முயற்சி செய்யுங்கள். இவை மின்சார உபயோகத்தை 75 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தும்
வீட்டின் தளத்திற்குப் பூச்சு:
வீட்டில் தளத்திற்கு வெளிப்புறம் பூசப்படும் பூச்சு வீட்டின் உள்ளே வெப்பத்தைக் குறைப்பதுடன் ஏசி உபயோகத்தைக் குறைக்கும்
நனைக்காமல் சுத்தம் செய்யுங்கள்:
வீட்டில் உள்ள மறைப்புத் துணிகளை மற்றும் சீலைகளை காற்றில் உலர விடும் வகையில் நீங்களே வடிவமைப்பதன் மூலம் வாஷிங் மெஷினின் உபயோகம் குறையும்.
மூடியிட்டு சமையல் செய்யுங்கள்:
சமையல் செய்யும்போது பாத்திரங்களை மூடி செய்வதன் மூலம் வெப்பம் வெளியேறாமல் சீக்கிரம் சமைக்க முடியும். இதன் மூலம் எரிசக்தியை அல்லது மின்சார எடுப்பாக இருந்தால் மின் சக்தியை சேமிக்க முடியும்
சுடுதண்ணீர் வேண்டாமே:
வீட்டிலேயே அதிகம் மின்சாரம் உறிஞ்சுவது ஹீட்டர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? துணி துவைக்க, பாத்திரம் துலக்க, கார் கழுவ மற்றும் தரையை துடைக்கச் சுடுநீர் வேண்டாமே சாதாரண தண்ணீரே போதுமே. இதனால் ஹீட்டர் பயன்பாடு குறைந்து நிறையச் சேமிக்க முடியும்.