ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

‪#‎போராட்ட_நாயகர்_பகதூர்_ஷா‬



1857 புரட்சிக்குப் பின் ‪#‎பகதுர்ஷாவிடம்‬ இருந்து டில்லியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர் பறிமுதல் செய்தனர். 1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேற அனுமதிக்கப் படவில்லை.
அதுவும் கூட , முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களை எதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபகரித்தது.
சுற்றி வளைக்கப்பட்டார் சூத்திரதாரி
நகரை நிர்மூலமாக்கும் கொடுமைகளுக்கிடையில் சுதந்திரப்போரின் சூத்திரதாரியான மன்னர் பகதூர்ஷா வை சுற்றி வளைக்கும் வலைகள் ஆரம்பமாயின.அதற்கான பொறுப்பு கொடியவன்,ஆங்கிலக் கம்பெனியின் குதிரைப்படைத் தலைவன் ஹட்ஸனிடன் ஒப்படைக்கப்பட்டது.
நூறு குதிரைப்படை வீரர்களோடு புறப்பட்டான் ஹட்ஸன்.ஹீமாயூனின் சமாதியில் தஞ்சம் அடைந்திருந்த மன்னர் பகதூர் ஷாவையும்,அவரது பிள்ளைகளையும் கைது செய்தான்.
அழைத்து வருவதற்குள் அவனுக்கு ஆத்திரம் பொங்கியது.‪#‎இளவரசர்கள்_மூவரையும்‬ வண்டியிலிருந்து இறக்கினான்.அனைவருக்கும் முன்பாகவே அவர்களின்‪#‎ஆடைகளை_களைந்தான்‬.‪#‎மீர்ஜா_மொகல்‬,‪#‎மீர்ஜா_ராஜி_சுல்தான்‬,‪#‎மீர்ஜா_அபூபக்கர்‬ ஆகிய மூன்று இளைஞர்களையும் பட்டப்பகலில் பலபேர் முன்னிலையில் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்றான் ஹட்ஸன்.
கொல்லப்பட்ட இளவரசர்களின் உயிரற்ற சடலங்களை கழுகுக்கும்,காக்கைகளுக்கும் இரையாக வெட்ட வெளியில் வீசி எறிந்தான்.
மொகலாய இளவரசர்கள் கொல்லப்பட்ட அந்த இடம் அதன்பிறகு ‪#‎கூனி_தர்வாஜா‬ (கொலை வாசல்) என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இன்றும் இருசொட்டுக் கண்ணீர் விடாதவர்கள் இருக்க இயலாது.
‪#‎மாமன்னர்_பகதுர்ஷா_ஜீனத்_மஹல்_மாளிகையில்_சிறை_வைக்கப்பட்டார்‬.
அப்போது சிறையில் நிகழ்ந்த ஒரு காட்சியை‪#‎வரலாற்றாசிரியர்_காசிம்_ரிஜ்வி‬ ( Kasim Rizvi‪#‎The_Great_Bahadur_Sha_Jafer‬ –Page 10 ) இப்படி உணர்வு பூர்வமாக வர்ணிக்கிறார்.

Related Posts: