புதன், 21 டிசம்பர், 2016

இன்று இரவு பூமிக்கு அருகே வரும் விண்கற்களால் ஆபத்தா?

இன்று நள்ளிரவில் பூமிக்கு மிக அருகில் 4 விண்கற்கள் கடந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Meteorites
சூரிய குடும்பத்தில் 6,00000-ற்கும் அதிகமான விண்கற்கள் காணப்படுகின்றன. இதில் 10,000 விண்கற்கள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இவற்றால் சில சமயம் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படலாம் எனவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகமான ESA தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று இரவு பூமிக்கு அருகே கடக்கப் போகும் கற்களால் பாதிப்பு எதுவும் வராது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கல் பூமியில் இருந்து 1.5 மில்லியன் மைல் தொலைவில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கற்களில் ஒன்று 260 மீட்டர் விட்டம் உடையது என தெரியவந்துள்ளது.
இந்த விண்கற்கள் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்து தாக்குவதற்கு வாயுப்புகள் உள்ளது என கடந்த வாரம் நாசா விஞ்ஞானி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது விண்கற்களில் வேகம் எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் அவை பூமியில் மோதினால் மிகப்பெரிய சேதம் ஏதும் ஏற்படாது எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: