வெள்ளி, 19 மே, 2017

ரஜினியின்..அரசியல் பேச்சு! கட்ஜுவின் சாட்டையடி பதிலடி! வாய் திறப்பார மிஸ்டர் ரஜினிகாந்த்!



ரஜினி..அரசியல்.. கட்ஜுவின் சாட்டையடி பதிவு! *

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டார என்பது குறித்து கடந்த சில தினகங்களாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. ரஜினி வரவேண்டும் என்று ஒரு தரப்பு, அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று மற்றொருதரப்பு. இந்நிலையில் இந்த ’ஹாட் டாபிக்’ குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவு பின்வருமாறு,

’தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பது தான் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றை பார்க்கச் சென்றேன். படத்தின் துவக்கத்தில் சிவாஜி கணேசனின் காலை மட்டும் தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்பாட்டம் செய்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படிதான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும். அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி.. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்ஜூவின் பதிவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. அவரின் பதிவு அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Posts: