வெள்ளி, 16 ஜூன், 2017

ஸ்பெயின் நாட்டின் சாதனையை தனது சாதனையாக சித்தரித்த உள்துறை அமைச்சகம்!

ஸ்பெயின் நாட்டின் சாதனையை தனது சாதனையாக சித்தரித்த உள்துறை அமைச்சகம்!


எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ஸ்பெயின் செய்த சாதனையை, தனது சாதனையாக உள்துறை அமைச்சகம் சித்தரித்த சம்பவம் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சகம் கடந்த புதனன்று வெளியிட்ட ஆண்டறிக்கையில், தனது சாதனைகளை பட்டியலிட்டிருந்தது. அப்போது, எல்லையில் ஊடுருவலை தடுக்கும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அதன் படத்தையும் வெளியிட்டிருந்தது.

இப்படங்கள் 2006-ஆம் ஆண்டு ஸ்பெயின் - மொராக்கோ எல்லையில் ஜேவியர் மொயானோ என்பவரால் எடுக்கப்பட்டவை என்பதை கண்டறிந்த ALT (Alternative News and Views in the Post-Truth World) செய்தி நிறுவனம் இந்திய உள்துறை அமைச்சகம் தனது ஆண்டறிக்கையில் போலியான படங்களை அளித்துள்ளதை அம்பலப்படுத்தியது.

இது தொடர்பான செய்தி, ALT செய்திகளில் மட்டுமல்லாமல் ANI, BBC உள்ளிட்டவற்றிலும் வெளியானது.
 

இதனை அடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலியான படத்தை அளித்தது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள BBC நிறுவனம், ALT செய்தியினை மேற்கோள்காட்டியதுடன், இதேபோன்று சென்னை வெள்ளத்தின் போது பிரதமர் மோடி விமானத்தில் இருந்து வெள்ளக்காட்சிகளை காண்பது போன்ற சித்தரிக்கப்பட்ட படங்களை அரசின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளையும் நினைவுக்கூர்ந்துள்ளது.