ஞாயிறு, 4 ஜூன், 2017

'fire ball' வைரஸால் பாதிகப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்! June 03, 2017

'fire ball' வைரஸால் பாதிகப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்!


‘Wannacry ransomware', EternalRocks உள்ளிட்ட வைரஸ்களை தொடர்ந்து fireball எனும் இணைய வைரஸ் உலகின் அடுத்த தொல்லையாக களமிறங்கியுள்ளது.

ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி சைபர் தாக்குதலை நடத்தியது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். உலகம் முழுவதும் 3 லட்சம் கணினிகளுக்கு மேல் ஊடுருவி தன்னுடைய நாச வேலைகளில் ஈடுப்பட்டு வரும் இந்த வைரஸின் தொல்லை தீர்வதற்குள்ளாகவே 'Eternal Rocks' எனும் இன்னொரு வைரஸ் இணையத்தில் களமிறங்கி பீதியை கிளப்பியது.

ரேன்சம் வைரஸை விட மோசமானதான எடர்னல் ராக்ஸில், NSA பயன்படுத்தும் 7 டூல்கள் பயன்படுத்தப்படிருப்பதாக கணினி அறிஞர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்த வைரஸ்கள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங்க் சிஸ்டத்தில் எளிதாக பரவும் தன்மைகளை கொண்டுள்ளதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்திருந்தார்கள்.  hadow brokers எனப்படும் ஹாக்கிங் குழுதான் 2 மாதங்களுக்கு முன்பு இந்த NSA டூல்களை திருடி வெளியிட்டுள்ளது. இந்த குழு அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணைகளின் தரவுகளைக்கூட ஹாக் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், வரும் ஜூன் மாதம் முதல் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வைரஸ்களை வெளியிடவுள்ளோம் என இந்த ஹாக்கர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ஃபையர் பால் எனப்படும் சைபர் வைரஸ் இணைய உலகை தற்போது கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. சீனாவை சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வைரஸ், நமது கணினிகளில் ஊடுறுவி அனைத்து தகவல்களையும் வேவு பார்க்கும் தன்மைக்கொண்டது. இந்த வைரஸ் மூலம் நமது கணினியில் உள்ள எந்த வகையான secured தகவல்களையும் எடுத்துக்கொள்ளமுடியும் என கணினி வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன்பு வந்த வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை குறிவைத்தே தங்களின் தாக்குதல்களை நடத்திவந்தன. ஆனால் Fireball வைரஸானது, மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் ஊடுறுவி தன்னுடைய நாச வேலைகளில் ஈடுபடும் தன்மையை கொண்டிருக்கின்றது.

இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 25 கோடி கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணினி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் இரண்டரை கோடி கணினிகளை இந்த வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வைரஸானது, பெரும்பாலும் இணையத்தில் வரும் Pop-up விளம்பரங்கள் மூலமாகவே பரப்பப்படுகிறது. எனவே கணினி உபயோகிப்போர்கள் இதுபோன்ற விளம்பரங்களை கிளிக் செய்யாமல் தவிர்ப்பதன் மூலம் இந்த வைரஸ்களில் இருந்து தப்பிக்கலாம் என கணினி வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts: