ஞாயிறு, 4 ஜூன், 2017

விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்! June 03, 2017

விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்!


பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து திரும்பிய ரஷ்ய, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இருவர் கசக்கஸ்தான் நாட்டில் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளனர்.

ரஷ்யாவின் ஒலிக் நோவிட்ஸ்கி, பிரான்சின் தாமஸ் பெஸ்கட் ஆகிய இருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து 6மாதக்காலம் ஆராய்ச்சி செய்தனர். ஆராய்ச்சி முடிந்ததையடுத்து இருவரும் சோயுஸ் விண்கலத்தில் ஏறியபின் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து விலகித் தனியாகப் புவிக்குப் பயணம் மேற்கொண்டனர். மூன்று மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்த சோயுஸ் விண்கலம் கசக்கஸ்தானின் தேஸ்கஸ்கான் என்னுமிடத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அப்போது அங்கே காத்திருந்த ரஷ்ய விண்வெளித்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்று ஓய்விடத்துக்கு அழைத்துச் சென்றனர். 

பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து புவிக்குத் திரும்பிய பிரெஞ்ச் விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கட்டுடன் அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார். தாமஸ் விண்வெளியில் தங்கியிருந்த 6 மாதக்காலத்துக்குள் பிரான்சில் ஒருசில நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டதாக அப்போது மேக்ரான் குறிப்பிட்டார். மே மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றுத் தான் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Related Posts: