திங்கள், 5 ஜூன், 2017

இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி! June 05, 2017

இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி!


மனிதனை விண்ணுக்கு அழைத்துச் செல்லக்கூடிய இந்தியாவின் GSLV MARK-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான இறுதிகட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இஸ்ரோவால் முழுவதும் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, GSLV MARK-3 ராக்கெட் இன்று மாலை 5.28 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது. இதன் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

GSLV MARK-3  ராக்கெட் 4 டன் எடை வரையிலான செயற்கை கோள்களை புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டவை.  இந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் மனிதன் தங்கி பயணம் செய்ய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ, இந்த ராக்கெட் ஏவப்பட்டால் உலகரங்கில் அதிக கவனத்தை பெறும். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

Related Posts: