டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை மர்ம இளைஞர்கள் இருவர் தாக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருந்தது. அப்போது, சீதாராம் யெச்சூரிக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவரை தாக்குவதற்கு இரண்டு இளைஞர்கள் முயற்சித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள், சம்பந்தபட்ட இளைஞர்களை, சுற்றி வளைத்து தாக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் சந்திப்பில் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். யெச்சூரியை இளைஞர்கள் தாக்க முயன்றதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு இளைஞர்களும் இந்து சேனா அமைப்பை சார்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.