2018ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 2018ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு இரண்டரை மணி நேரமும், 12ம் வகுப்பு தேர்வு 3 மணி நேரமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு தேர்வு இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மன அழுத்தமின்றி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முன்கூட்டிய பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.