வெள்ளி, 16 ஜூன், 2017

பெட்ரொல் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கும் முறை அமலுக்கு வந்தது! June 16, 2017

பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் தினசரி மாற்றிய அமைக்கப்படுகிறது. அந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள முதல் நாளில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 12 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 24 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப பெட்ரோல்,டீசல் விலையை தினமும் நிர்ணயிக்க பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 
இதனையடுத்து பெட்ரோலிய நிறுவனங்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 12 காசுகள் குறைத்தும், இதே போன்று டீசல் விலை ஒரு ரூபாய் 24 காசுகளும் குறைத்தும் உள்ளன. 

இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதே போன்று தினமும் விலை மாறும் நடைமுறையும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts: