வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிகிச்சை முடிந்து, மீண்டும் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திற்கு 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையி, நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக ப.சிதம்பரம், சிறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறை மருத்துவக்குழுவினர் பரிந்துரையின்பேரில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முடிந்ததும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பின்னர் ப.சிதம்பரம் மீண்டும் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
credit ns7.tv