மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால் அது தேச துரோகமா? என ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திட வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது மணிரத்னம் உள்ளிட்ட பலர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது குறித்து பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு கருத்துக்கள் கொண்டிருப்பார்கள் என்றும் அதற்காக அவர்கள்மீது தேச துரோக வழக்கு தொடரப்படுமா? என்றும் கேட்டுள்ளார். இவ்வாறு மக்களின் வாயை மூடுவது அபாயகரமானது எனவும் பி சி ஸ்ரீராம் எச்சரித்துள்ளார்.
மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv