சுவிட்சர்லாந்தில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை அந்நாடு இந்தியாவிடம் வழங்கியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கு ஏற்ப, சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, அந்நாட்டில் வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த முதல் பட்டியலை அந்நாடு தற்போது வழங்கியுள்ளது.
தற்போதும் செயல்பாட்டில் இருக்கக் கூடிய மற்றும் கடந்த ஆண்டு முடித்துக் கொள்ளப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று அடுத்த பட்டியல், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கும் என கூறப்படுகிறது.
credit ns7.tv