சனி, 3 டிசம்பர், 2016

பொது டாய்லெட்டுக்கு கொடுத்த ‘5 ரூபாய் செக்’

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடுமுழுவதும் 2 நாட்கள் வங்கிகளும், ஏடிஎம் மையங்களும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய செலவுக்கூட பணம் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற நாள்முழுவதும் வங்கி முன் வரிசையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் உள்ள பொது கழிவரை ஒன்றுக்கு கையில் பணம் இல்லாததால் ரூ.5 வங்கி காசோலையை கொடுத்ததாக அதன் படத்துடன் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது.
whatsapp-image-2016-12-02-at-1-06-32-pm