சனி, 1 ஜூலை, 2017

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் போராட்டம்! July 01, 2017

ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் போராட்டம்!


ஜிஎஸ்டி வரிக்கு நாடு முழுவதும் வர்த்தகர்கள் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாடு முழுவதும் ஜிஎஸ்டி இன்று முதல் அமலாகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்ற வழிவகை செய்யும் வகையில், இந்த மசோதாவை நிறைவேற்ற ஜூலை 4 முதல் 8-ம் தேதி வரை சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய நிலையில், அங்குள்ள வணிகர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் காரணமாக தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.