குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் இறங்கியுள்ள தம்மை காங்கிரஸ் கட்சியின் பலிகடாவாகக் கருத வேண்டாம் என மீராகுமார் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குஜராத்திலிருந்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய மீராகுமார் இன்று கர்நாடக தலைநகர் பெங்களூரு சென்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி. எம்.எல்.ஏக்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் சித்தாந்தங்களின் அடிப்படையில்தான் தாம் போட்டியிடுவதாகவும் இது இரண்டு சித்தாந்தங்களுக்கிடையேயான போட்டி என்றும் கூறினார்.
தம்மை காங்கிரசின் பலிகடாவாக விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்த மீராகுமார் சித்தாந்தங்களை முன்வைத்து போட்டியிடுபவர்கள் பலிகடாக்கள் அல்ல என்றார். போராடும் குணமுடைய தாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற போராடுவேன் என்றும் மீராகுமார் கூறினார்.
இதற்கு முன் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் ஜாதி அரசியல் தலைதூக்கியதில்லை என்று குறிப்பிட்ட மீராகுமார், தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மோதுவதால் இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் ஜாதி அரசியல் தலை தூக்கியுள்ளதாகக் கூறினார். தலித்துக்கள் இருவர் மோதும் சூழல் ஏற்பட்டதை நினைத்து தாம் வெட்கப்படுவதாகவும் மீராக்குமார் கூறினார்.