வியாழன், 21 மே, 2020

சூறவாளிக் காற்றுடன் கரையைக் கடந்த ஆம்பன் புயல்!

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், ருத்ரதாண்டவமாடி ஆம்பன் புயல் கரையை கடந்தது. 
photo
வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே, மதியம் 2 மணி அளவில் கரையை கடந்தது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் அருகே, பிற்பகல் 2.30 மணிக்கு கரை கடக்கத் தொடங்கியது. 
கரையை கடக்கும் போது, சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள், மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் தடைபட்டது. ஆம்பன் புயலின் கோர தாண்டவத்தால், இரு மாநிலங்களும் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளன
Super Cyclone is crossing West Bengal Coast between Digha&Hatiya close to Sunderban. The forward sector of wall clouds has entered into the land. Landfall process will continue and take 2-3 hours to complete: IMD in a bulletin issued at 4:30 pm; Visuals from Digha
View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter
இதைப் பற்றி 102 பேர் பேசுகிறார்கள்

ஆம்பன் புயல் கரையை கடக்க, சுமார் 4 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. தற்போது வரை ஆம்பன் புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 5500 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் சேதங்களை மதிப்பிடும் பணி  நடைபெற்று வருவதாக, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. புயல் நெருங்கியதையடுத்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 4.5 லட்சம் பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
credit ANI/ NS7