வியாழன், 21 மே, 2020

கொரோனா பாதிப்பில் இன்று இந்தியாவில் புதிய உச்சம்!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான தினசரி நிலை அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுவருகிறது. 
அந்த வகையில் இன்று காலை வெளியாகியிருக்கும் கொரோனா நிலை அறிக்கையின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிதாக 5,609 பேருக்கு நோய் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது புதிய உச்சமாகும்.
இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,435ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 45,299ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 63,624ஆக உள்ளது.
மகாராஷ்டிரா:
நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1390 பேர் உயிரிழந்துள்ளனர், 10,318 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் 13,191 பேரும், குஜராத்தில் 12,537 பேரும், டெல்லியில் 11,088 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகவும் குறைந்த அளவாக அருணாச்சல பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv