சனி, 13 நவம்பர், 2021

சென்னை வெள்ளம்; நிவாரண நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டறிந்த ஆளுனர் ஆர்.என்.ரவி

11 11 2021   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்லைகள் அனைத்தும் நிரம்பியுள்ள நிலையில், ஆற்றுப்பகுதிக்கு அருகில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

இதில் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்து. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வரும் நிலையில், பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் இப்போது சென்னை திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை பாதுகாப்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று இரவுக்குள் நிலைமை சரியாகும் என்று பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கூறியுளளார்.

இந்நிலையில், தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர்.மு.க.ஸ்டாலினை தொலைபேசியில், தொடர்புகொண்டு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையினால் ஏற்பட்ட பாதிப்புகள், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ததாக ஆளுநரின் அதிகரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், ஆளுனர் ஆர்.என்.ரவி தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல், எஸ்.என்.பிரதான் அவர்களிடம் கனமழை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்ததாகவும், என்டிஆர்எஃப் (NDRF) -ன் 14 மீட்புக் குழுவினர் மற்றும் அதிக படைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்ததாக பதிவிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-governor-rn-ravi-speake-to-cm-stalin-for-disaster-recovery-368030/

Related Posts: