3 2 2022
Neet Exemption Bill Return : ஆளுனரின் ஒப்புதலுக்காக தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுனர் ஆர்.என் ரவி மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நீட் தேர்வுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர்
ஆனால் நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி தமிழக சட்டசபையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் இதுநாள் வரை ஆளுனர் தரப்பில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், ஆளுனரை ஒரு சில சந்தித்துள்ளார். மேலும் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திதக்க சென்ற தமிழக அமைச்சர்களை அவர் சந்திக்க நேரம் ஒதுக்காகது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, நீட் விலக்கு மசோதா ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் பல கடந்தாலும் இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நிலையில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுனர் மாளிகை தகவல் அளித்துள்ளது.
நீட் மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பியனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கம்:
தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர் மட்ட குழு அறிக்கையையும், அதை அடிப்படையாக வைத்து இயற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தேன். நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டம், நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம். அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது.
அதிலும் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது,. அதனால் இந்த மசோதாவை திருப்பி அனுப்புகிறேன்.
அதேபோல் நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது வேலூர் சிஎம்சி கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில் ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளது. அதில் கிராமத்தில் வரும் மாணவர்களுக்கும், பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதா அந்த தீர்ப்பிற்கு எதிராக உள்ளது. அதனால் இதை திருப்பி அனுப்பி உள்ளோம் என்று ஆளுநர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-governor-reject-of-the-neet-exemption-bill-return-to-tn-speaker-406302/