வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

நீட் மசோதா நிராகரிப்பு

 தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டிய சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அதனை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஆனால் இந்த தேர்வில் தோல்வி பயம்,தோல்வி மற்றும் இதர பிற காரணங்களுக்காக மாணவர்கள தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை அரங்கேறியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக சட்டசபையில், கடந்த செப்ம்பர் மாதம் 12-ந் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மசோதா குறித்து ஆளுனர் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று திடீரென தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுனர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் மாளிகையின் இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர் பலரும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் :

பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், “ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?” என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன் என்று ஆளுனரின நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்னன்

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அப்பட்டமான ஜனநாயக விரோதம். இதன் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அவையையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதிக்கத் தவறியுள்ளார். இதற்காக 5 மாதங்களை அவர் எடுத்துக்கொண்டது ஏன்? தாமதப்படுத்துவதன் மூலம் தனது முடிவை திணிப்பதுதானே?

அதுவும் ஆளுநர் தனது செய்தி அறிக்கையில் ‘மாணவர் நலனுக்கு விரோதமாக’ உள்ளதாக சொல்லி மசோதாவை திருப்பியனுப்பியிருக்கிறார். இந்த ஆண்டின் குரூரமான நகைச்சுவை இது. ஆளுநரின் தவறான இந்தப் போக்கிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டுள்ளனர். இந்த முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விசிக திருமாவளவன்

மாநிலஅரசின் மசோதாக்களை தில்லி அனுப்புவதுதான் ஆளுநரின் பணி. அதன்மீது முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உண்டு. மசோதாவைத் திருப்பி அனுப்பியது இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்கு! அதிகார வரம்புமீறல்! வரும்போதே எச்சரித்தோம் இவர் இப்படித் தானென்று!. என கூறியுள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்ப அனுப்பி இருப்பது மத்திய அரசின் அராஜக போக்கைக் காட்டுகிறது என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

மேலும் தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டு வரும் நிலையில், தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்க கோரியும் தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் வலியுறுத்தியுள்ளனர்.

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை இந்த அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

நீட் மசோதாவை திருப்ப அனுப்பியது தமிழக மக்களை புறக்கணிக்கும் செயல் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை. அதிமுக அரசு கையாண்ட விதத்தில்தான், திமுக அரசு நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் வெளிப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-political-leaders-say-about-neet-execution-bill-rejected-406344/