இந்தியாவின் வேலையின்மை விகிதம் டிசம்பரில், நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.9 சதவீதத்தை தொட்டது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவு திங்களன்று காட்டியது.
பல மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதற்கு முன்பே, இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்து வரும் போக்கைக் காட்டுகிறது.
சமீபத்திய வேலையின்மை விகிதம் என்ன?
டிசம்பரில் வேலையின்மை விகிதம் 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பரில் 7 சதவீதமாகவும், 2020 டிசம்பரில் 9.1 சதவீதமாகவும் இருந்தது.
நகர்ப்புற வேலையின்மை விகிதம், முந்தைய மாதத்தில் 8.2 சதவீதத்தில் இருந்து டிசம்பரில் 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.4 சதவீதத்தில் இருந்து, 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது.
வேலைவாய்ப்புக்கான ஆபத்துகள் என்ன?
வாராந்திர அளவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம், டிசம்பர் நடுப்பகுதியில் சுமார் 10.09 சதவீதமாக, இரட்டை இலக்க விகிதம் அதிகரித்தது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு என்பது சிறந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கான பிரதிநிதியாகும். மேலும் இந்த எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு, சிறந்த ஊதியம் பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் வேலைகளில் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
ஓமிக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் புதிய தடைகளை விதித்துள்ளதால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நுகர்வு அளவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார மீட்சியை மேலும் மோசமாக பாதிக்கும்.
நாட்டில் திங்களன்று 33,750 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 123 இறப்புகள் பதிவாகியுள்ளன. 10,846 வைரஸ் தொற்றிலிருந்து, பூரண குணமான நிலையில், நாட்டின் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,45,582ஐ தொட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/india-unemployment-rate-rose-to-7-9-per-cent-in-december-392106/