சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். 2022-23 முதல் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை யார் தொடங்குவார்கள்?
இந்திய ரிசர்வ் வங்கி வரும் நிதியாண்டு முதல் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்தும். இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பின்பற்றுகிறது.
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (சி.பி.டி.சி – CBDC) என்றால் என்ன?
சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது காகிதத்தில் வெளியிடப்பட்ட ரூபாய் நாணயத்தைப் போன்றது. இது வேறு எந்த நாணயத்துடனும் மாற்றக்கூடியது.
சி.பி.டி.சி-க்கான தேவை என்ன?
இன்வெஸ்டோபீடியா கருத்துப்படி, பயனர்களுக்கு டிஜிட்டல் வசதி, பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வங்கி முறையின் ஒழுங்குபடுத்தப்பட்ட, இருப்பு ஆதரவு புழக்கத்தை வழங்குவதே இலக்காகும்.
கிரிப்டோகரன்சிகள், பிற மெய்நிகர் கரன்சிகள் மீதான அரசாங்கத்தின் நோக்கத்தை பட்ஜெட்டில் உள்ள அறிவிப்பு அடிப்படையில் வெளிப்படுத்துகிறது. பிட்காயின், ஈதர் போன்ற தனியார் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாத நிதியளிப்பு, வரி ஏய்ப்பு போன்றவற்றை ரிசர்வ் வங்கி பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி அதன் சொந்த சி.பி.டி.சி-ஐ அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
டிஜிட்டல் ரூபாய் மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பரப்புரையாளர்களால் முன்மொழியப்பட்ட பல மாதிரிகள் உள்ளன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முறையான அறிவிப்பு மக்களால் டிஜிட்டல் ரூபாய் எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படும் என்பதைக் விளக்கும். இதில், ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தற்போதைய டிஜிட்டல் கட்டண அனுபவத்திற்கு மாறாக டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
source https://tamil.indianexpress.com/explained/what-is-the-digital-rupee-announced-by-nirmala-sitharaman-in-budget-405160/