31 1 2022 Budget 2022 Live Updates, Budget 2022 Latest News in Tamil: ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள் கிழமை அன்று (31/01/2022) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது. காலை 11 மணிக்கு துவங்கிய அவரது உரையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வருங்காலத்தில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் தன்னுடைய உரையில் பதிவு செய்தார்.
31ம் தேதி துவங்கியுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்ட அமர்வு 31ம் தேதி துவங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும். பிறகு பிப்ரவரி 12ம் தேதி துவங்கி மார்ச் மாதம் 13ம் தேதி வரை நாடாளுமன்ற நிலைக்குழு இந்த பட்ஜெ தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு பிறகு இரண்டாம் கட்ட அமர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையை நிரூபிக்க மேலும் ஒரு சோதனை
பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து குரல் எழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்ள்ளனர். ஆனாலும் ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியினரும் மற்றொரு கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறது. எனவே கடந்த ஆண்டு வேற்றுமைகளை கலைந்து விவசாய போராட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பியது போன்று இந்த முறை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குரல் ஓங்கி ஒலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/union-budget-2022-live-union-budget-highlights-latest-updates-404460/