புதன், 13 ஜூலை, 2022

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

12 07 2022 கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் இன்று 2,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று ஒரே நாளில் 2,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 18,710 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது.
இன்று ஒரே நாளில் 2,372 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினர்.

கர்ப்பிணிகள் அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சமாக சென்னையில் 755 பேரும், செங்கபட்டில் 382 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் 116 பேர், காஞ்சீபுரத்தில் 87 பேர், திருவள்ளூரில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 2 பேரும், அரியலூரில் 5 பேரும் பாதிக்கப்பட்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/todays-corona-detail-tn-health-department-released.html

Related Posts: