ஞாயிறு, 9 ஜூலை, 2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

 

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என அரசு கருதுபவற்றை சிறப்பு திட்டங்களாக அறிவித்து நிலங்களை கையகப்படுத்தும் வகையில் நிபுணர்குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம், சிப்காட் தொழிற்பேட்டை, ஜவுளி பூங்கா மற்றும் நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களுக்கு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த இந்த சட்டம் வழிவகை செய்யும் எனவும் அந்த மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிதிகள் உத்தரவிட்டனர்.

source https://news7tamil.live/petition-in-the-high-court-to-cancel-the-tamil-nadu-land-consolidation-special-schemes-amendment-act.html

Related Posts: