அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், பொறியியல் படிப்பு முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் மோசடி செய்ததில் 37 தற்காலிகப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 132 மாணவர்களின் பொறியியல் பட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் செமஸ்டர் தேர்வில் முறைகேட்டில் மாணவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பொறியியல் படிப்பும் ரத்து செய்யப்படும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்கும் படி அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. மாணவர், பேராசிரியர் முறைகேட்டில் ஈடுபடுவதாக தெரியவந்தால், அது பற்றிய தகவலை உடனடியாக தேர்வுக் கட்டுப்பாட்டாளருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source : ns7.tv