சிரியாவிலிருந்து ஏதோ ஒரு ஐரோப்ப நாட்டுக்கு அகதிகளாக புறப்பட்ட படகு விபத்துக்குள்ளாகி அதிலிருந்த பிஞ்சு குழந்தை பலியாகி துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய அவலம்.
இந்த புகைப்படைத்தை வெளியிட்ட பிரிட்டன் பத்திரிகையான 'இண்டிபெண்டன்ட்' இந்த புகைப்படத்தை கண்டபிறகாவது அகதிகள் விசயத்தில் ஐரோப்பா தங்களின் பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ள வேண்டுமென கோரியுள்ளது.
சிரியா,மற்றும் லிபியா வின் இன்றைய நிலைமைக்கு காரணமானதில் பெரும் பங்கு உள்ள ஐரோப்பா அந்நாடுகளின் அகதிகள் விசயத்தில் மனுதாபிமானமற்ற போக்கையே கடைபிடிக்கிறது.
இந்த அவல நிலைகளுக்கு காராணம் தம்மை வளர்ந்த நாடுகள் என சொல்லிக் கொள்ளும் நாடுகளே…தங்கள் பொருளாதாரத்தையும் , ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ளுவதுக்காக உலகில் இன,மத மோதல்களை உருவாக்கி தங்கள் ஆயுத வியாபாரத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.அதில் ஒரு சில வீதங்களை அகதிகளுக்கு செலவழித்து உலகை ஏமாற்றுகிறார்கள்.