திங்கள், 16 நவம்பர், 2015

தீவிரவாத தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது

பாரிஸ் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது
பாரிஸ் நகரில் செயின் டென்னிஸ் மைதானம், ஓட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள 7 இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 124 பேர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உலக மக்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய இந்த தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான தாக்குதலாகும். தாக்குதலில் ஈடுபட்டடது யாராக இருந்தாலும் மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற தாக்குதலை சாதரண தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியாது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தெரிகிறது. அதிபர் ஹோலண்டு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது அவர்களுக்கு மிகப்பெரிய வளைப்பின்னல் இருப்பதை உணர்த்துகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் அதற்கு பிண்ணனியில் உள்ளவர்களும் தண்டிக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற கோரப்படுகொலைகள் நடைபெறாமல் இருக்க சர்வதேச சமுகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அதற்கு பொறுப்பேற்றுள்ளது. இவர்களுடைய நடவடிக்கை மனிதகுலத்திற்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. காண்போரை கொலை நடுங்க செய்த தீவிரவாத தாக்குதலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது.
இப்படிக்கு
M.முகம்மது யூசுஃப்
(மாநிலப் பொதுச் செயலாளர்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Related Posts: