புதன், 15 ஜூன், 2016

உஷார் மக்களே! உஷார்!


.இது மதுரைக்காரங்களுக்கு மட்டுமில்ல… எல்லாருக்கும்தான் உஷார் மக்களே!
.தங்களின் வருமானம் நிச்சயம்! அதுவே எங்களின் லட்சியம்!!
.நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மாதாந்திர மற்றும் நிரந்தர கூடுதல் வருமானம் ஈட்ட விருப்பம் உள்ளவரா ஆம் எனில் கீழ்கண்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். தங்களின் கல்வித் தகுதி, வயது மற்றும் விருப்ப நிலையின் அடிப்படையில் நீங்கள் ஒர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.

13407271_257257217974352_2206061740933858868_n
.இப்படி சில நாட்களாக நாளிதழுக்குள் வைத்து ஒரு விளம்பரம் நோட்டீஸ் வருகிறது. 
.பகுதி நேரமாக பணம் சம்பாதிக்க வாய்ப்பளிப்பதாக இந்த விளம்பரம் உள்ளது.
.அதில் அவர்களுடைய முகவரி, போன் நம்பர் ஏதுமில்லை. தல்லாகுளம் போஸ்ட் ஆபிஸில், போஸ்ட் பாக்ஸை வாடகைக்கு எடுத்து அதையே முகவரியாக கொடுத்துள்ளார்கள்.
.இது ரியல் எஸ்டேட் கும்பலா, அதிக வட்டி தரும் போலி நிதி நிறுவனமா, இல்ல உடல் பாகங்கள திருடுற கும்பலா எது என்றே தெரியவில்லை. 
.தன்னோட முகவரியை தெரிவிக்காத நிறுவனம் எப்படி யோக்கியமானதா இருக்கும்? 
.ஆகையால் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இதுபோன்ற விளம்பரம் நோட்டீஸ் வழங்கும் மோசடி கும்பல்களிடம் இருந்து உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts: