புதன், 15 ஜூன், 2016

தபோல்கரை படுகொலை செய்த இந்துத்துவா தீவிரவாதியின் அதிரவைக்கும் இ மெயில் கோட்வேர்டுகள்-

பார்க்க வீடியோ 

மும்பை: பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரை படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா எனும் இந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய சதிகாரரான வீரேந்திர தாவ்டே தம்முடைய நாசகார செயல்களுக்கான இமெயில்களில் கோட்வேர்டு பயன்படுத்தியிருந்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 2013-ம் ஆண்டு பகுத்தறிவாளர் தபோல்கர், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறியதால் 2014-ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணையை சிபிஐ வசம் மாற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தபோல்கரைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் பன்சாரே, கன்னட எழுத்தாளர் கல்புர்க்கி என சிந்தனையாளர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டதால் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக கூறி பலரும் விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இதனால் சகிப்பின்மை விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சனாதன் சன்ஸ்தா
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தபோல்கரைப் படுகொலை செய்த சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த வீரேந்திர தாவ்டேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 2009-ம் ஆண்டு கோவா குண்டுவெடிப்பை நிகழ்த்தியதும் இந்த இந்துத்துவா தீவிரவாத இயக்கம்தான். இதன் பின்னர் அந்த இயக்கத்தின் தலைவராக செயல்பட்ட அகோல்கர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


தீவிரவாதிகள் அகோல்கர், தாவ்டே
தபோல்கர் படுகொலையிலும் இந்த இயக்கத்துக்கு தொடர்பிருக்கலாம் என சிபிஐ அதிகாரிகள் சந்தேகித்து அகோல்கர், தாவ்டே வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தபோல்கர் படுகொலையில் தாவ்டேவுக்கு தொடர்பிருப்பது உறுதியானதால் கைது செய்யப்பட்டார்.


2010 முதல் வேவு
அவரிடம் அகோல்கர் குறித்தும் கொலைச் சதி குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2010-ம் ஆண்டு முதலே தபோல்கரை குறிவைத்து வேவு பார்த்ததாக தாவ்டே கூறியிருக்கிறார். மேலும் இ மெயில்களில் கோட்வேர்டுகளை இந்த தீவிரவாத கும்பல் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.


கோட்வேர்டுகள்
தாவ்டேயின் ஒரு இமெயிலில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியத்துக்காக ‘தொழிற்சாலைகளை’ உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதில் ஏதோ ஒரு ரகசியம் இருப்பதாக உணர்ந்த சிபிஐ அதிகாரிகள் தாவ்டேவிடம் கேட்டபோது, ‘கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை உருவாக்க வேண்டும்’ என்பதுதான் இதற்கு அர்த்தம் என கூறி அதிர வைத்திருக்கிறார். பெரும்பாலான இமெயில்களில் தேசி, விதேசி என்ற சொற்றொடர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு மெயிலில், கள்ளத்துப்பாக்கிகளை அஸ்ஸாம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


3 படுகொலைகளில் தொடர்பு
தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி படுகொலைகளிலும் தாவ்டே ஒரு முக்கியமான சதிகாரராக சிபிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். ஏனெனில் இந்த 3 படுகொலைகளும் ஒரே மாதிரியாக நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த படுகொலைகளில் ஒரே துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக மும்பை தடவியல் அறிக்கையும் 2 வெவ்வேறு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பெங்களூரு தடவியல் அறிக்கையும் தெரிவிக்கிறது. இதனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் தடயவில் அறிக்கை முடிவை சிபிஐ அதிகாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts: